மதுரை : அகில இந்திய அளவில் காவல்துறையினருக்கான பூப்பந்து போட்டி கடந்த 03.02.2020 முதல் 09.02.2020 வரை மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது. இப்போட்டியில், தமிழ்நாடு காவல்துறை சார்பாக, மதுரை மாநகர் ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி. ஹேமா மாலா அவர்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்றார். இன்று காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், இ.கா.ப., அவர்கள் காவல் ஆய்வாளரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

T.C.குமரன் T.N.ஹரிஹரன்















