தென்காசி: தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் ஆய்வாளர் திரு. செந்தில்மாறன் அவர்கள் ஆலங்குளத்தில் இன்று (26.03.2024) பாதுகாப்பு பணியை முடித்துவிட்டு மீண்டும் ஊத்துமலை காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, கிடாரக்குளம் ஊரின் வெளியே 80 வயது மூதாட்டி தள்ளாடியபடி நடந்து சென்று கொண்டிருப்பதை பார்த்து அவர்களை வாகனத்தில் பாதுகாப்பாக ஏற்றி மூதாட்டியின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். காவல் ஆய்வாளரின் இத்தகைய மனிதாபிமானமிக்க செயலை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.