மதுரை : வட மாநிலங்களில் இருந்து மதுரை மாநகருக்கு வந்து தங்கி வேலை பார்த்து வந்த வடமாநிலத்தவர்கள் மற்றும் உண்ண உணவு இல்லாமல் வறுமையில் வாடிய 15 நபர்களுக்கு இன்று 14.04.2020-ம் தேதி கீரைத்துறை சட்டம்&ஒழுங்கு காவல் ஆய்வாளர் திரு.மணிகண்டன் அவர்கள் தனது சொந்த செலவில் ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு டேவிட்சன் தேவாசீர்வாதம் இ. கா. ப., அவர்கள் ஆய்வாளரின் நற்செயலை பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

T.C.குமரன் T.N.ஹரிஹரன்















