திருவாரூர் : காவல் ஆணைய தலைவர் Justice.சி.டி.செல்வம் (முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி) அவர்கள் இன்று (28.11.2023) திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் திருவாரூர் நகர காவல் நிலையத்தை பார்வையிட்டு, காவலர்களின் நலன் மற்றும் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்தார்கள். ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார், M.Sc, (Agri). அவர்கள், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.T.ஈஸ்வரன் மற்றும் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்களும் உடனிருந்தார்கள்.