திருச்சி : தமிழக காவல்துறை இயக்குநர் சி.பி.சங்கர் ஜிவால், அறிவுறுத்தலின்படி, திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரில் உள்ள பெட்டிக் கடைகள், டீ கடைகள் மற்றும் கூல்டிரிங்ஸ் கடைகளில் (குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி அருகில் உள்ள கடைகளில்) குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல்பான் மசாலா போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உதவியுடன் சிறப்பு அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அதன்படி திருச்சி மாநகர் முழுவதும் உணவப் பாதுகாப்பு துறை மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளின் உதவியுடன் காவல்துறையினர் இணைந்து பள்ளி, கல்லூரி அருகில் உள்ள பெட்டிக் கடைகள், டீ கடைகள் மற்றும் பொது இடங்களில் உள்ள கூல்டிரிங்ஸ் கடைகளில் குட்கா, புகையிலை, ஹான்ஸ், கூல்லிப், விமல்பான் மசாலா போன்ற போதைப் பொருள்களை இளைஞர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றதா என சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.
இச்சோதனையில் காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழப்புலிவார்டு சாலையில் வாழைக்காய் மண்டி அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த TN 23 AW 3003 என்ற பதிவு எண் கொண்ட காரை சோதனை செய்தபோது, காரில் சுமார் ரூ.72,600 மதிப்புள்ள புகையிலை, RMD பான்மசாலா விமல், கூல்லிப் போன்ற போதை பொருள்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. செல்போன், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து காரின் உரிமையாளர் லால்குடியை சேர்ந்த ராம்குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் கைது செய்தனர். அதோடு மற்றொரு பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 70 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு சுமார் ரூ.1,00,000 ஆகும். சோதனையின் முடிவில் 36 நபர்களுக்கு மேல் வழக்கு தொடரப்பட்டது சோதனையின் போது உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி