கோவை: கோவை மாநகரம் B4 உக்கடம் காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த திரு.ஜெயகுமார் (வயது 53) என்பவர் கொரானா நோய்தொற்று காரணமாக இறந்து விட்டார். இன்று 25.05.2021. ஆம் தேதி காலை 11.00.மணியளவில் கோவை மாநகர காவல் ஆணையர் திரு.தீபக் எம். தாமோர். இ.கா.ப. அவர்கள் கோவை மாநகர காவல் அலுவலக வளாகத்தில் இறந்து போன சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயகுமார் என்பவரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் கோவை மாநகர காவல் ஆணையரைத் தொடாடந்து காவல்துணை ஆணையர்கள். கூடுதல் காவல் துணை ஆணையர் நுண்ணறிவு பிரிவு மற்றும் காவலர்கள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்கள்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்