திருச்சி : திருச்சி மாநகரத்தில் கடந்த (01.07.22), ம் தேதி ஸ்ரீரங்கம் காந்திரோடுஅருகே நின்று கொண்டிருந்த ஒருவரிடமிருந்து, இருசக்கர வாகனத்தில், வந்த இரண்டு நபர்கள் செல்போனை (மதிப்பு ரூ.11000/-) பறித்து சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் குற்றவாளி, நிவாஸ் @ ஸ்ரீநிவாசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேலும் குற்றவாளி, பொதுமக்களுக்கும், பொதுஅமைதிக்கு பங்கம் விளைவித்ததாக திருச்சி மாநகரில் காவல்நிலையங்களில், பல வழக்குள் நிலுவையில் இருப்பதால், குற்றவாளியின் தொடர் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்கள்.