தூத்துக்குடி : (16.12.2022) நாசரேத் காவல் நிலையம், திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் மற்றும் திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் முக்கிய வழக்கு கோப்புகளையும், ஆவணங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. அருள், திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ஆவுடையப்பன், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. கனகபாய், உதவி ஆய்வாளர்கள் திரு. ராய்ஸ்டன், திரு. குமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் திரு. கல்யாணி, திரு. கணபதி உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.