திருநெல்வேலி : நல்லிணக்க நாள் உறுதிமொழி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ப.சரவணன் இ.கா.ப., அவர்களின் தலைமையில் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சிறப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. மாரிராஜன் அவர்கள், மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜு அவர்கள் மற்றும் மாவட்ட குற்ற ஆவணக்காப்பக பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பெரியசாமி அவர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
“சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்றும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன்.” என்று உறுதிமொழி ஏற்றனர்.