தென்காசி : தென்காசி மாவட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இரண்டு (2/12/ 2022) திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் திரு.பிரவேஷ் குமார் ஐ.பி.எஸ், அவர்கள் ஆய்வு மேற்கொண்டார் பின்னர் மாவட்ட காவல் அலுவலகம் தனிப்பிரிவு அலுவலகம் மாவட்ட குற்ற ஆவண காப்பகம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு, மாவட்ட குற்றப்பிரிவு, தொழில்நுட்ப பிரிவு, ஆகிய பிரிவுகளில் பராமரிக்கப்படும் கோப்புகளை மற்றும் ஆவணங்களை ஆகியவற்றை சரியான முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறதா என்று ஆய்வினை மேற்கொண்டார். மேலும் தென்காசி மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சு பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதாக வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கிருஷ்ணராஜ் ஐ.பி.எஸ், அவர்கள் உடன் இருந்தார்.