வேலூர் : வேலூர் மாவட்டம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர் தீயணைப்பாளர் சிறை காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நாளை (27/11/2022), நடைபெற உள்ளது வேலூர் மாவட்டத்தில் 15 தேர்வு மையங்களில் ஆண்கள் – 12799 மற்றும் பெண்கள் – 2192 என மொத்தம் 14 991 நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இது தொடர்பாக காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகள் குறித்து வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ்.ராஜேஷ் கண்ணன், அவர்களின் தலைமையில் காட்பாடியில் உள்ள VIT கல்லூரியில் இன்று அறிவுரை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் காவலர் எழுத்து தேர்வு குறித்து காவல்துறையினர் மற்றும் காவல்துறை அமைச்சு பணியாளர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன பணிகள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரைகள் வழங்கினார்.
இந்த எழுத்து தேர்வு திருமதி. N. காமினி I.P.S, I.G.P , Add COP Hqrs & Traffic, Tambaram Police அவர்கள் மேற்பார்வையில், வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேர்வு குழு உறுப்பினருமான திரு.ராஜேஷ் கண்ணன் அவர்களின் தலைமையில் துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், உட்பட 1200 காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அறிவுரை கூட்டத்தில் தேர்வுக்குழு துணை உறுப்பினர்கள் திரு பாஸ்கரன் ஏ டி எஸ் பி அவர்கள் திரு கணேசன் D.S.P EOW அவர்கள் செல்வி.யுவ பிரியாD.S.P சைபர் கிரைம் விங் ஹெட் குவாட்டர்ஸ் சென்னை, அவர்கள் மற்றும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.குணசேகரன் CCPS அவர்கள் திரு.சேகர், cwc அவர்கள் உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்