தமிழகத்தில் சதி செயலில் ஈடுபட திட்டமிட்ட தீவிரவாதிகளை கைது செய்தமைக்காக தமிழக அரசால் வழங்கப்படும் முதல்வரின் பதக்கத்தினை உளவுத்துறை காவல் துணை தலைவர் திரு.கண்ணன் இ.கா.ப அவர்கள்¸ காவல் கண்காணிப்பாளர் திரு.மகேஷ் இ.கா.ப அவர்கள்¸
காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்த் அவர்கள்¸ காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பன்டரிநாதன் அவர்கள்¸ காவல் ஆய்வாளர் திரு.தாமோதரன் அவர்கள் ஆகிய 5 பேருக்கு தமிழக முதல்வரின் விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.