புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா பாண்டே இ.கா.ப., அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் (Monthly Crime Review Meeting) நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மொத்தம் 07 நபர்களை (24.10.2024) இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்கள். மேலும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெற்றி பெற்ற 06 நபர்களை நேரடியாக வரவழைத்து பாராட்டினார்கள்.