தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குநர் மற்றும் காவல்துறை இயக்குநர் திரு.கரன் சின்கா, இ.கா.ப., அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்ற பணிநிறைவு விழாவில் காவல் அணி வகுப்பு மரியாதை வழங்கி, காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் நினைவு பரிசு வழங்கினார்.
Tr. Karan Singha IPS, DGP/Director, Fire and Rescue Services retirement Farewell Parade held at Rajaratnam Stadium, Director General of Police presented a memento.
திரு.கரன் சின்கா, இ.கா.ப., காவல்துறை இயக்குநர் மற்றும் இயக்குநர்/தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு படை அவர்கள் பணி ஓய்வு பெறுவதையொட்டி, இன்று (28.02.2022) காலை, எழும்பூர், இராஜரத்தினம் விளையாட்டரங்கில் தமிழக காவல்துறை சார்பில் பணி நிறைவு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஓய்வு பெறும் காவல்துறை இயக்குநர் திரு.கரன் சின்கா, இ.கா.ப, அவர்களுக்கு கவாத்து அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சி.சைலேந்திரபாபு, இ.கா.ப., அவர்கள் தமிழக காவல்துறை சார்பாக காவல்துறை இயக்குநர் திரு.கரன் சின்கா, இ.கா.ப., அவர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்.