திருவாரூர்: திருவாரூர்மாவட்ட காவல்துறையில் 29 சட்டம் & ஒழுங்கு காவல்நிலையங்கள் உள்ளது. முத்துப்பேட்டை காவல் உட்கோட்டம்
பெருகவாழ்ந்தான் காவல்நிலைய கட்டிடம் பழுதாகி இயங்கிவந்த நிலையில் மாவட்ட காவல்துறையின் கோரிக்கையின்பேரில் தமிழக அரசால் பெருகவாழ்ந்தான் காவல்நிலையத்தின் அருகிலேயே புதிய இடம் தேர்வுசெய்யப்பட்டு ரூ.91.86 லட்சம் மதிப்பீட்டில் 2990 சதுர அடியில் கட்டிடம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி ஆணையின்பேரில் தமிழ்நாடு வீட்டு வசதி கழகம் மேற்படி இடத்தில் கட்டிடம் கட்டும் பணியை துவங்க உள்ளது.
இந்நிலையில் அதற்கான அடிக்கல்நாட்டுவிழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.R.ஸ்ரீனிவாசன் அவர்கள் தலைமையில் இன்று(27.07.21) காலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முத்துப்பேட்டை உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.வெள்ளத்துரை,
தமிழ்நாடு வீட்டுவசதி கழக உதவி செயற்பொறியாளர் திரு.G.உலகநாதன் , இளநிலை பொறியாளர் திரு.T.கண்ணன் ஆகியோர் மற்றும் காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் உள்ளூர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலை வகித்து அனைவரையும் வரவேற்று சிறப்பித்து அடிக்கல்நாட்டுவிழா முடித்து பின்னர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்