தஞ்சை: மாவட்டம் திருவிடைமருதூர் அருள்மிகு மகாலிங்கசுவாமி ஆலயத்தில் கடந்த (11-2- 2025)- ம் தேதி அன்று தைப்பூச விழாவையொட்டி காவிரி ஆற்றின் கல்யாணபுரம் படித்துறையில் தீர்த்தவாரி விழா நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடினார்கள். விழா முடிந்த பொதுமக்கள் கலைந்து சென்ற நேரத்தில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாழுக்கா மேல மருத்துவக்குடியை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் முரளிதரன் (15). என்பவர் கல்யாணபுரம் காவிரி ஆற்றில் நீராட இறங்கிய போது தவறி விழுந்து நீரில் முழுவதுமாக மூழ்கி விட்டார். இதனை கண்ட திருவிடைமருதூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையத்தில் பணிபுரிந்து வரும் பையர்மேன் திருவிடை மருதூர் திரு .அ. ராஜீவ்காந்தி (8999) அவர்கள் உடனே நீரில் மின்னல் வேகத்தில் பாய்ந்து அந்த சிறுவனை வெளியில் எடுத்து சுயநினைவு இழந்த நிலையில் இருந்த சிறுவனுக்கு சி பி ஆர் மூலம் முதலுதவி சிகிச்சை செய்து சுய நினைவு திரும்பிய நிலையில் சிறுவனை திருநீலக்குடி காவல்நிலைய இரண்டாம் நிலைக்காவலர் திரு செந்தில் அவர்கள் உடன் இணைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவிடைமருதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள் .
தங்கள் உயிரை துச்சமாக நினைத்து சிறுவனின் உயிர் காத்த சீறுடை பணியாளர்களை அப்பகுதி மக்கள் பாராட்டினார்கள். இத்தகவல் அறிந்த தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு ஆர் .ராஜாராம் – டிபிஎஸ் அவர்கள் வீரர்களை பாராட்டி தனது அலுவலகத்தில் இவ்விரு வீரர்களுக்கும் வீர செயலுக்கான சான்றிதழ் வழங்கினார்கள் .
போலீஸ் நியூஸ் பிளஸ் செய்தியாளர்

குடந்தை-ப-சரவணன்