தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவல்துறை வாகன ஓட்டுனர்களிடம் வாகனங்களின் குறைபாடுகளை கேட்டறிந்தார். குறைபாடு உள்ள வாகனங்களை உடனே சீர் செய்யுமாறு ஆயுதப்படை காவல் ஆய்வாளர்திரு. சுடலைமுத்து, அவர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் நான்கு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும், இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும்.
சாலை விதிகளை மதித்து நடக்க வேண்டும். எவ்வித விபத்தும் ஏற்படா வண்ணம் வாகனம் ஓட்ட வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதனை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலைய இருசக்கர வாகன ரோந்து காவலர்களுக்கும் இரவு நேரத்தில் பயன்படுத்துவதற்கு பவுச்சுடன் கூடிய டார்ச் லைட்டுகளை (Torch Light with Pouch) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் வழங்கினார். இந்த வாகன ஆய்வின் போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் சந்திஸ் இ.கா.ப, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுடலைமுத்து, ஆயுதப்படை மோட்டார் வாகன பிரிவு உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன், உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்