கடலூர்: தமிழ்நாடு காவல்துறை மாநில அளவிலான வருடாந்திர (2021) துப்பாக்கி குண்டு சுடும் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் 5.1.2022 முதல் 7.1.2022 வரை3 நாட்கள் நடைபெற்றது.
வடக்கு மண்டலம் காவல்துறை சார்பில் கடலூர் மாவட்டம் ஆயுதப்படை முதல் நிலை காவலர் திரு.V.வினோத்குமார் அவர்கள் தனிநபர் கார்பன் துப்பாக்கி குண்டு சுடுதலில் பங்கேற்று முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றும்,
நெய்வேலி தெர்மல் முதல்நிலை பெண்காவலர் திருமதி.ராஜேஸ்வரி அவர்கள் தனிநபர் இன்சாஸ் துப்பாக்கி குண்டு சுடும் பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றார்.
ஓட்டுமொத்தமாக துப்பாக்கி குண்டு சுடும் போட்டியில் பங்கு பெற்று கடலூர் மாவட்ட காவல்துறையினர் மூன்றாமிடத்திற்குரிய கேடயம் பெற்றனர். துப்பாக்கி குண்டு சுடும் பயிற்சியில் பதக்கம் பெற்றவர்களுக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.சக்திகணேசன் IPS பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.