திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில், காணாமல் போன குழந்தைகளை கண்டெடுத்து பெற்றோர் மற்றும் காப்பாளர் வசம் ஒப்படைப்பது தொடர்பாக மாண்புமிகு உச்சநீதி மன்ற ஆணையின்படி, ‘Operation smile -2021’ என்ற பாதிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் உள்ள குழந்தைகளை மீட்பதற்காக இத்திட்டம் சிறப்பான முறையில் நடைபெற அனைத்து துறைகளும் இணைந்து நடத்திட ஏதுவாக சமூகநலத்துறை,
தொழிலாளர் துறை, காவல்துறை, ஆள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் கல்வித்துறை. சைல்டு லைன், தொழிலாளர் நலத்துறை, ஒருங்கிணைந்த சேவை மையம், தொண்டு நிறுவனங்கள், குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களை சார்ந்த பணியாளர்கள் மற்றும் குழந்தைகள் நலனோடு தொடர்புடைய துறை சார்ந்த அலுவலர்கள் அடங்கிய ஆய்வுக்குழு அமைத்து அனைத்து
வட்டாரங்களுக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுக்களானது மாவட்டத்திலுள்ள அனைத்து முக்கிய இடங்களான நடைபாதைகள், முக்கிய சாலைகள் பேருந்து நிலையங்கள், சுற்றுலா தலங்கள், வழிபாட்டு தலங்கள், இரயில்வே நிலையங்கள் முதலிய மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஆதரவற்று கற்றித்திரியும் குழந்தைகள் குறித்த ஆய்வு செய்யவும், ஆய்வின்போது காணாமல் போன குழந்தைகள்
கண்டறியப்படின், அக்குழந்தைகள் குறித்து விவரங்களை “Missing Child Portal’ல் பதிவேற்றம் செய்யப்படவும் உள்ளது.
இக்குழுக்களானது 01.02.2021 முதல் 15.02.2021 வரை தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் தினமும் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட குழந்தைகள் ஏதேனும் கண்டறியப்பட்டால் அக்குழந்தைகளை உடனயாக மீட்டெடுத்து திருவாரூர் குழந்தைகள் நலக்குழுவில் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு மற்றும் மறுவாழ்விற்காக ஒப்படைக்கப்படும்.
பொது மக்கள் அனைவரும் தங்களது பகுதிகளில் ஆதரவற்ற நிலையிலோ அல்லது பாதுகாப்பற்ற சூழ்நிலைகளிலோ குழந்தைகள் எவரேனும் இருந்தால் உடனடியாக 1098 மற்றும் 100 என்ற 24 மணி நேர இலவச தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு குழந்தைகள் பற்றிய விபரங்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
புன்னகையைத் தேடி -2021 என்னும் இந்நிகழ்ச்சியின் துவக்கமாக 01.02.2021 அன்று காலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் துவக்கி வைத்து சிறப்பித்த மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு கார்த்திக், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர் திருமதி கலைவாணி மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி.ப.முத்தமிழ்ச்செல்வி, சிறப்பு சிறார் காவல் பிரிவு அலுவலர்கள், மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் கலந்துக்கொண்டனர்.
திருவாரூர் மாவட்டத்திலிருந்து குடியுரிமை நிருபர்
திரு. G. சிவராமகிருஷ்ணா