திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பிரசன்னகுமார், இ.கா.ப., சேரன்மகாதேவி துணை காவல் கண்காணிப்பாளர் அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ் ஆகியோரின் ஆலோசனையின் பேரில், சேரன்மகாதேவி காவல் நிலையம் சார்பில் பாரதிதாசன் தெருவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் தர்மராஜ் பரிசுகள் வழங்கிப் பாராட்டினார். நிகழ்ச்சியில் காவல் உதவி ஆய்வாளர்கள் சுடலைக்கண்ணு, அன்னஜோதி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் ஹரிஹர சுப்பிரமணியன், முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















