இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு மாரத்தான் போட்டி வருகிற 26.02.2022 (காலை 5.30 மணி) அன்று இராமநாதபுரம் மாவட்டம் கமுதி கோட்டைமேடு-முதுகுளத்தூர் ரோட்டில் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.
இப்போட்டியில் விருப்பமுள்ள விளையாட்டு வீரா்கள் வீராங்கனைகள் அனைவரும் கலந்து கொள்ள அழைக்கப் படுகின்றனர்.
மேலும், போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது என்ற விபரத்தை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு .E. கார்த்திக், இ.கா.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.