மதுரை : நேற்று மதுரை மாநகர் C3-S.S.காலனி குற்ற பிரிவு காவல்நிலைய காவல் ஆய்வாளர் திரு.உமாபதி அவர்கள் மதுரை கோச்சடை, சாந்தி சதன் குடியிருப்பு 66 வது வார்டு பொதுமக்களுடன் நல்லுறவு மேம்பாட்டிற்கான சிறப்பு கூட்டத்தை சாந்தி சதன் குடியிருப்பு வளாகத்தில் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க முடியும் எனவும் காவல்துறை உங்கள் நண்பன் என்பதை ஒவ்வொரு நபரும் உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு காவல்துறையால் பெண்களின் பாதுகாப்பிற்காக புதிதாக அறிமுகம் செய்துள்ள காவலன் SOS (SAVE OUR SOUL) செயலி்யை எவ்வாறு பதிவிறக்கம் செய்தல் மற்றும் அவற்றின் பயன்பாடுகள் குறித்தும் மேலும் POCSO ACT, CHILD MARRIAGE, CHILD ABUSE, CHILD LABOUR பற்றி விரிவாக விளக்கம் அளித்தார். மேலும் 66 வது வார்டு பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தேவைகள் மற்றும் குறைகளை கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு உதவவேண்டும் என 66 வது வார்டு பொறுப்பு அலுவலரான காவல் உதவி ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் C3-S.S.காலனி குற்ற பிரிவு சார்பு-ஆய்வாளர் திரு.மணிகுமார், சட்டம் & ஒழுங்கு சார்பு-ஆய்வாளர் திரு.சுந்தரபாண்டி மற்றும் காவல்நிலைய ஆளினர்கள் மற்றும் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்