மதுரை: மதுரை மாநகர் திலகர்திடல் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.பிளவர்ஷீலா, 80 வது வார்டு பொதுமக்களுடன் நல்லுறவு மேம்பாட்டிற்கான சிறப்பு கூட்டத்தை மணிநகரம் ராசு தேவர் கல்யாண மண்டபத்தில் நேற்று துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
காவல்துறையும் பொதுமக்களும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே தடுக்க முடியும் எனவும், காவல்துறை உங்கள் நண்பன் என்பதை ஒவ்வொரு நபரும் உணர்ந்து செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும் 80 வது வார்டு பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் தேவைகள் மற்றும் குறைகளை கண்டறிந்து உடனடியாக அவர்களுக்கு உதவவேண்டும் என 80 வது வார்டு பொறுப்பு அலுவலரான காவல் உதவி ஆய்வாளருக்கு உத்தரவிட்டார். காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS., அவர்கள் காவல் ஆய்வாளரை பாராட்டினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை