திருவாரூர் : திருவாரூர் மாவட்ட ஆயுதப்படையில் இன்று (04.11.2025) திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு. K. ஜோஷி நிர்மல் குமார், இ.கா.ப., அவர்கள் வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஆயுதப்படை காவலர்கள் பணியின் போது உபயோகிக்கும் உடை பொருட்கள் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் வாகனங்களையும் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்பவர்கள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், வாகனத்தை குறைந்த வேகத்தில் ஓட்டுவது குறித்தும், காவல் ரோந்து வாகனத்தில் செல்பவர்கள் விபத்து பகுதிகளில் கண்டறிந்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், வாகனத்தில் அவ்வப்போது ஏற்படும் பழுதுகளை உடனடியாக சரி செய்து நல்ல முறையில் வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.
மேலும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்களின் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து ஆயுதப்படையில் உள்ள ஆயுத வைப்பறை பராமரிப்பு மற்றும் அவற்றின் பதிவேடுகளை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினார்கள். அப்போது திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கருண் கரட், இ.கா.ப., அவர்கள் மற்றும் திருவாரூர் ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.M.சீனிவாசன் அவர்கள் உடனிருந்தார்கள்.
















