வேலூர்: வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.மயில்வாகனம் இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. அண்ணாதுரை(CCW) அவர்களின் ஆலோசையின்படி IUCAW, SJHR மற்றும் ACTU போலீசார் இணைந்து (29-09-2025)- ம் தேதி வேலூர் மாவட்ட குடியாத்தம், மேல்பட்டி, காக்காதோப்பு, அத்தி, இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவ மாணவியருக்கு சாதி, மத, இன வேறுபாடுகள் இன்றி இச்சமுதாயத்தில் அனைவரும் சமம் என்றும் வன்கொடுமைகள் பற்றியும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பெண்கள் தொடர்பான உதவி எண் 1081 குழந்தைகள் தொடர்பான உதவி எண் 1098 குழந்தை திருமணம் காவல் உதவி செயலி மற்றும் போக்சோ தொடர்பாக விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.