அரியலூர்: அரியலூர் மாவட்ட மதுவிலக்கு அமல்பிரிவு காவல் துறையினர் சார்பாக தத்தனூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ச.செல்வராஜ் அவர்கள் பேரணிக்கு தலைமையேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். முன்னதாக போதைப்பொருள் விழிப்புணர்வு வாசகங்கள் பொருந்திய டி-ஷர்ட்களை மாணவர்களுக்கு வழங்கினார்கள்.
இப்பேரணி தத்தனூரில் தொடங்கி மீனாட்சி ராமசாமி கல்லூரியில் முடிவுற்றது. போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள், குற்றங்கள் மற்றும் இளம் தலைமுறையினரின் வாழ்க்கை சீரழிவு முதலியவற்றை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பேரணியில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஆர்.விஜயராகவன் அவர்கள், மீனாட்சி கல்வி நிறுவனங்களின் தாளாளர் திரு.எம்.ஆர்.ரகுநாதன் அவர்கள் முன்னிலை வகித்தனர். ஜெயங்கொண்டம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.ராமச்சந்திரன் அவர்கள், மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.தண்டபாணி அவர்கள், உதவி ஆய்வாளர் திருமதி.அமரஜோதி அவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.