திருவாரூர் : (07.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினர் மூலம் கூத்தாநல்லூர் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் பெருகி வரும் சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூத்தாநல்லூர் அரசினர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் குற்றங்கள் சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி- பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்படுத்தி கொண்டு பரிசு (Gift) பார்சல் அனுப்புவதாக கூறினால் நம்பாதீர்கள், பொது இடங்களில் உள்ள இலவச WI-FI பயன்படுத்தும் போது உங்கள் செல்போன் ஹேக் செய்யப்பட்டு, சுய விபரங்கள் திருடப்படலாம் எனவும், கார், நகை, பணம் பரிசாக விழுந்துள்ளதாக கூறி அஞ்சலகத்தில் பணம் கட்டி பெற்று கொள்ளலாம் என்று சொன்னால் நம்பி ஏமாறாதீர்கள் எனவும், இணையத்தை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது என்பது குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in -ல் புகார் அளிக்குமாறு துண்டு பிரசுரங்கள் வழங்கி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.