திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் வருகிற 4 – தேதி விநாயகர் சதுர்த்தி அன்று வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் தினம் என்பதால், மீஞ்சூர் காவல் நிலைய அதிகாரிகள் மூலமாக விநாயகர் ஊர்வலத்தில் அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்காக கொடி அணி வகுப்பு காவல்துறை சார்பாக நடத்தப்பட்டது.
இந்த அணிவகுப்பில் செங்குன்றம் உதவி ஆணையர் திரு. முருகேசன், அவர்களின் தலைமையில் மீஞ்சூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சிரஞ்சீவி, மற்றும் உதவி ஆய்வாளர் திரு.வேலுமணி ஆகியோர் அணிவகுத்து சென்றனர் மேலும் இந்த அணி வகுப்பு மீஞ்சூர் பஜார் வீதி மற்றும் இஸ்லாமியர்கள் பெருமளவு வசிக்கும் பகுதியாக அரியன் வாயில் ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டது.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு