வேலூர் : வேலூர் தொரப்பாடி ஜீவா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் வயது (39), இவர் வறுமையின் காரணமாக கஞ்சா வியாபாரம் செய்து வந்தார். இவர் மீது பாகாயம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ராஜேந்திரன் மனம் திருந்தி வாழ முடிவு செய்தார்.மேலும் வாழ்வாதாரத்திற்காக உதவி செய்யும்படியும் மாவட்ட காவல் துறைக்கு கோரிக்கையும் வைத்தார்.அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் தான் மனம் திருந்தியதாக ஒப்புக்கொண்டார். அப்போது கஞ்சாவை யாரும் பயன்படுத்த வேண்டாம். உடல் நலத்திற்கும் அது தீங்கானது. உங்கள் வாழ்க்கையை கெடுத்து விடும் என்று மனம் வருந்தி தெரிவித்தார். அவருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் அவரின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக வழிவகை செய்து கொடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்து கொண்டார்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்