சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுவதும் வருகிற 19.02.2022 அன்று நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில், புனித தோமையர்மலை காவல் மாவட்ட துணை ஆணையாளர் திரு.A.பிரதீப், இ.கா.ப., அவர்கள் வழிகாட்டுதலுடன், மடிப்பாக்கம் சரக உதவி ஆணையாளர் திரு.பிராங்க்ளின் டி ரூபன் அவர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்களுடன் இன்று (17.02.2022) காலை, புனித தோமையர்மலை காவல் மாவட்டத்தில் பொன்னியம்மன் கோயில் சந்திப்பு வழியாக சென்று, மடிப்பாக்கம் பேருந்து நிலையம், குளக்கரை தெரு, பாரதியார் தெரு, வேளச்சேரி மெயின் ரோடு, சபரி சாலை, அய்யப்ப நகர் மெயின் ரோடு, மேடவாக்கம் மெயின் ரோடு மற்றும் கீழ்க்கட்டளை பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் கொடி அணிவகுப்பு (Police Flag March) நடத்தப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

அப்துல் ஹாபிஸ்