திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து உட்கோட்டத்தில் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டைக்கு மாண்புமிகு முதலமைச்சர் வருகை தந்து நிகழ்ச்சிகளில் பங்கு பெற இருப்பதால் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பாக வாகன தணிக்கை, தங்கும் விடுதிகள், மக்கள் அதிகம் கூடும் இடமான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் போன்ற முக்கிய இடங்களில் பாதுகாப்பு சம்மந்தமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 05.02.2025 முதல் 07.02.2025 வரையிலான மூன்று நாட்கள் கங்கைகொண்டான் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள சுமார் 5 கி.மீ சுற்றளவிற்கு எவ்விதமான ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதுடன் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படுவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.