வேலூர் : தமிழக காவல்துறை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திரபாபு இ. கா.ப., அவர்களின் உத்தரவின் படி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்த அறிவுரை அளித்தார் . அதன் பேரில் (20.03.2023), – ம் தேதி காலை 10.30. மணி அளவில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் டாக்டர் திரு N.கண்ணன், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S. முத்துசாமி, இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்களின் தலைமையில் (20.03.2023 முதல் 21.03.2023) ஆகிய 2 நாட்கள் வடக்கு மண்டல காவல்துறை சார்பாக காவல்துறை, சீருடை பணியாளர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற காவல் துறை வாரிசுதாரர்களுக்கும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் வேலூர் காட்பாடி VIT பல்கலைக் கழக அண்ணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்த வேலை வாய்ப்பு முகாமினை வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் முனைவர் M.S.முத்துச்சாமி இ.கா.ப அவர்கள், வேலூர் சரக சிறை துறை துணைத் தலைவர் திரு. செந்தாமரைக்கண்ணன், அவர்கள் வேலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு.S.ராஜேஷ் கண்ணன் இ.கா.ப., அவர்கள், ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண் ஸ்ருதி, இகா.ப., அவர்கள், திரு. G. V. செல்வம், விஐடி பல்கலைக்கழக துணைவேந்தர், அவர்கள், வேலைவாய்ப்புத் துறை துணை இயக்குனர் திருமதி. G. பரமேஸ்வரி, அவர்கள் மற்றும் திரு N. ராம சுப்பிரமணியம், துணை இயக்குனர் CII அவர்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இந்த வேலை வாய்ப்பு முகாமில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.ராஜேஸ் கண்ணன், இ.கா.ப., அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் வாழ்த்துரையாக திருமதி. G. பரமேஸ்வரி, துணை இயக்குனர் வேலை வாய்ப்பு துறை வேலூர் அவர்கள். திரு G.V செல்வம் துணைவேந்தர் விஐடி பல்கலைக்கழகம் அவர்கள். முனைவர் திரு. M.S. முத்துசாமி இ.கா.ப., வேலூர் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள். ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண் சுருதி,இ.கா.ப.,அவர்கள் நிகழ்ச்சியில் மிகச் சிறப்பான முறையில் வாழ்த்துரை யாற்றினார்கள் . விழாவில் இறுதியாக திரு. G.B. செந்தாமரை கண்ணன் த.சி.சி.ப., துணைத் தலைவர் இந்த முகாமில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் வாரிசுதாரர்கள், சீருடை பணியாளர்களின் வாரிசுதாரர்கள் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். இந்த முகாமில் 35 company-கள் வேலைவாய்ப்பு வழங்குவதற்காக வந்துள்ளனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்