கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ரஜத் சதுர்வேதி, இ.கா.ப,. அவர்கள் உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பாக கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பு மற்றும் பேருந்து நிலையங்களில் கிராமப்புற வாத்திய குழு மூலமாக விழிப்புணர்வு பாடல்களைப்பாடி சைபர் கிரைம் குற்றங்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.