திருவள்ளூர் : திருவள்ளூர் மதிப்பிற்குரிய தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர்(சட்டம் & ஒழுங்கு) திரு. கி. சங்கர் இ.கா.ப., அவர்கள் நேற்று இரவு திருவள்ளூர் மாவட்டத்தில், வெங்கத்தூர் வாகன சோதனைச் சாவடி, ஆயில் மில் சந்திப்பு, காமராஜர் சிலை சந்திப்பு மற்றும் தேரடி ஆகிய இடங்களில் இரவு ரோந்து பணிகளை ஆய்வு மேற்கொண்டார் மற்றும் திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கோப்புகளை ஆய்வு செய்தார். வடக்கு மண்டல காவல்துறை தலைவர், திரு. N. கண்ணன் இ.கா.ப., அவர்களும், காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் திரு. P.பகலவன் இ.கா.ப., அவர்களும் மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. PC கல்யாண் இ.கா.ப., அவர்களும், மதிப்பிற்குரிய தமிழ்நாடு காவல்துறை கூடுதல் இயக்குனர்(சட்டம் & ஒழுங்கு) அவர்களின் ஆய்வின் போது உடன் இருந்தனர்.