திருவள்ளூர் : சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆவடி காவல் ஆணயகரம் செங்குன்றம் சரக மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் மீஞ்சூர் ஸ்ரீ சந்திரபிரபு ஜெயின் கல்லூரி இணைந்நு அரியன் வாயல் இரயில்நிலையம் மீஞ்சூர் பஜார் வீதி ஆகிய பகுதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் துண்டறிக்கை விநியோகம் மைக் பிரச்சாரம் ஆகியவைகள் செய்யப்பட்டன. ஜூன் 26 சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போதை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த ஆவடி காவல் ஆணையர் அருண் அவர்கள், உத்தரவிட்டிருந்தார் அதன் அடிப்படையில் மீஞ்சூர் பகுதியில் செங்குன்றம் சரக மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் ஸ்ரீ சந்திரபிரிபு ஜெயின் கல்லூரி இணைந்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் செங்குன்றம் சரக மதுவிலக்கு அமல் பிரிவு ஆய்வாளர் முனுசாமி, கலந்து கொண்டு பொதுமக்களுக்கு துண்டறிக்கை வழங்கி விழிப்புணர்வு ஊட்டினர். மேலும் மாணவ மாணவிகள் விழப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக அரியன் வாயல் மீஞ்சூர் பஜார் வீதி இரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தனர். இதில் மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு உறுப்பினர் அபுபக்கர் கல்லூரி முதல்வர் சுஜாதா இரயில்வே காவல்துறை ஆய்வாளல் ரவி ,மீஞ்சூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சைமன், தேசிய மாணவர் படை ஆசிரியர் முரளிதரன் முத்துகுமரன் சீனிவாசன் சரண்யா மற்றும் பாலஜி உட்பட மாணவ மாணவிகள் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினர் திரளாக கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு