விருதுநகர்: விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பெருமாள். இவர் சில தினங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள், இன்று மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.