யார் இந்த ராஜேஸ்வரி..?
தமிழ்நாடு காவல்துறையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலைக்கு சேர்ந்த இவர் ஒரு பழுதூக்கும் வீராங்கணை ஆவார்..
மனிதநேயத்துடன் இவர் உதவி செய்வது இது புதிதல்ல..
ஏற்கனவே 1992″ யில் கும்பகோணம் மகாமக குளத்தில் இடிபாடுகளில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தன் தோளில் சுமந்து அருகில் உள்ள முதலுதவி மையத்தில் சேர்த்து பல பேர் இன்று உயிருடன் இருக்க காரணமானவர் தான் இந்த ராஜேஸ்வரி..
காவல்துறை பணியில் இருந்து கொண்டே பல்வேறு மனித நேயப்பணிகளையும், சமூக நலப்பணிகளையும் இப்போதும் செய்து வருகிறார்..
தனது வருமானத்தில் ஆதரவற்ற பல பெண்களுக்கு பெட்டிக்கடை வைத்து கொடுத்தது,
சாலையோரங்களில் மன நலம் பாதிக்கப்பட்ட பெண்களை காப்பகங்களில் சேர்ப்பது,
சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் சுற்றித்திரிவோர்களுக்கு உணவுப்பொட்டலம் குடிநீர் வழங்குவது,
ரோட்டோரங்களில் தூங்குவோர் குளிரில் நடுங்கக்கூடாது என்பதற்காகவே தனது ஜீப்பில் எப்போதும் போர்வை பண்டல்களை வைத்திருப்பார்..
இப்படி பல்வேறு சமூகப்பணிகளுக்காக தனது வருமானத்தில் ஒரு பகுதியை செலவழித்து வருகிறார்..
மேலும்,
காவல்துறை கடமையில் மிகவும் நேர்மையானவர் சுறுசுறுப்பானவர் என்ற பெயரையும் எடுத்திருக்கிறார்..
கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகச்சிறப்பாக செயல்பட்ட காவல்துறை அதிகாரிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது..
