செங்கல்பட்டு: தமிழக காவல் துறையில் பணிபுரிந்த எங்களது தந்தை/கணவர் பணியில் இருக்கும் போது அகால மரணம் அடைந்தால் கருணை அடிப்படையில் அரசால் வழங்கப்படும் வேலை வாய்ப்பு மூலமாக அமைச்சுப் பணியாளர் பணியில் ஒன்றான இளநிலை உதவியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இளநிலை உதவியாளர் பதவிக்காக சுமார் 18 ஆண்டுகளாக காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றோம். தற்போது எங்களுக்கு தற்காலிக பணியாக கணினி விவர பதிவாளர் (DEO) மற்றும் தகவல் பதிவு உதவியாளர் (DEA) பணியில் அமர்த்தப்பட்டு பதவி உயர்வு இல்லாமல் அதே பணியில் இருந்து வருகிறோம். தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் பணிப்புரியும் கணினி விவர பதிவாளர் (DEO) மற்றும் தகவல் பதிவு உதவியாளர்கள் (DEA) கடந்த 15 ஆண்டுகளாக ஒரே பதவியில் பணி இருந்து வருகிறோம். எங்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமனம் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கணினி விவர பதிவாளர்களை (DEO) ஒரு முறை நிகழ்வாக 248 துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலக எழுத்தர் பணியிடத்திற்கு இளநிலை உதவியாளராக பணிமர்த்த அரசாணை பெற்று தரவும் தகவல் பதிவு உதவியாளராக (DEA) பணிப்புரிந்து வரும் எங்களுக்கு பணி விதிகள் (Adhoc Rules) கணினி விவரப்பதிவாளர்கள் (DEO) G.O.Ms No.220 உள்துறை (Pol.XV) துறை, நாள் 18.02.2016. அரசாணையில் உள்ள விதிகள்படி தகவல் பதிவு உதவியாளராகிய எங்களுக்கும் பெற்றுத்தரவும் 5.G.O.Ms No.70 , (24.07.2023) அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி நியமனம் 25% ஒதுக்கீடு ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் காவல்துறையில் கருணை அடிப்படையில் நியமனம் பெற முடியாமல் 3ஆயிரம் காவல் துறை வாரிசுகள் கருணை அடிப்படை பணி நியமனம் பெற தடை ஏற்பட்டடுள்ளது. இந்த ஆணை ரத்து செய்யவும் தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் பணிப்புரியும் தகவல் பதிவு உதவியாளர்/ வரவேற்பாளர் ஆகிய எங்களுக்கு காவலர்களுக்கு உள்ளது போல பேருந்து அட்டை (BUS PASS) மற்றும் குடியிருப்புகள் (QUATERS) ஆகையால் கணினி விவர பதிவாளர்கள் மற்றும் தகவல் பதிவு உதவியாளர்கள் என தங்களது இந்த கோரிக்கைகள் சம்மந்தமாக தமிழக அரசு பரிந்துரை செய்து எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு காவல்துறை அமைச்சு பணியாளர் சங்க செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தரப்பில் கோரிக்கை வைத்தனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்