திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தாலுக்கா, துருகம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி மகன் செல்வம் வயது 25 என்பவரும், கலசப்பாக்கம் தாலுக்கா எஸ் எம் நகரைச் சேர்ந்த ஏழுமலை மகன் சரவண ராஜி வயது 25 என்பவரும், கலசப்பாக்கம் தாலுக்கா புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சிவகுமார் வயது 24 என்பவரிடம் காவல் துறையில் காவலர் வேலை வாங்கித்தருவதாக ரூபாய் 225000/- பணத்தை வாங்கிக்கொண்டு ஏமாற்றியுள்ளனர்.
இதுதொடர்பாக சிவகுமார் அளித்த புகாரின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.R.சிபிசக்கரவர்த்தி,IPS., அவர்களின் உத்தரவின் பெயரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) திரு.K.சரவணகுமார் அவர்களின் தலைமையில் திருவண்ணாமலை தாலுக்கா காவல் நிலைய ஆய்வாளர் திரு.G.கோவிந்தசாமி (பொறுப்பு மாவட்ட குற்றப்பிரிவு) மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இருவரையும் கைது செய்து விசாரித்ததின் பெயரில் இதேபோன்று 21 நபர்களிடம் காவல் துறையில் காவலர் பணி வாங்கித் தருவதாக ஏமாற்றி சுமார் 30 லட்சம் பணத்தை ஏமாற்றியது தெரியவந்தது.
எனவே அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. மேலும் அவர்களிடமிருந்து 3 கார் 21 நபர்களின் அசல் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டது.