சிவகங்கை : சிவகங்கை மாவட்ட குற்ற பதிவேடு கூடம் பிரிவில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரியும் திரு. கண்ணன் என்பவர் சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து காவல் பணிகளில் இருந்துள்ளார். இவர் சாலை பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து, உணர்த்தும் விதத்தில் ஹெல்மெட் ,சீட்பெல்ட் அணிவதன் அவசியம் குறித்து கவிதை எழுதியுள்ளார்.
அதேபோன்று சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றாமல் போனால் உயிரிழப்பு ஏற்படும். அதனால் குடும்பத்தலைவனை நம்பி வாழும் குடும்பத்தின் நிலை என் நிலைக்கு செல்லும் என்பதை தத்ரூபமாக விளக்கும் விதத்தில் கவிதை நடையுடன் பாடல் எழுதி வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக மது அருந்தி வாகனம் ஓட்டுவதால் அதிக விபத்து நடப்பது குறித்தும் அதனால் அவரது குடும்பம் நடுத்தெருவில் நிற்கும் என்பதை உணர்த்தும் விதத்தில் பாடல்கள் எழுதியுள்ளார்.
அதேபோன்று பெற்றோர் சேமித்து வைத்திருக்கும் பணத்தில் 18 வயதிற்கு கீழ் உள்ள மகன் மற்றும் பேரன்களுக்கு டூவீலர்கள் வாங்கிக் கொடுத்து அவர்களை இழக்க வேண்டாம் எனவும் விழிப்புணர்வு கவிதை எழுதியுள்ளார்.
இதன்மூலம் சிவகங்கை மாவட்ட மக்களிடையே சிறப்பு சார்பு ஆய்வாளர் கவிதை கண்ணன் என்றழைக்கப்படுகிறார், இவரது கவிதை வரிகள் அனைத்து சாலை பாதுகாப்பு விழாவிலும் இடம் பெற்றுள்ளன.
இதனடிப்படையில் சிவகங்கை மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் மீது பொதுமக்களிடம் மிகுந்த மதிப்பையும் பாராட்டை ஏற்படுத்தும் விதமாக கவிதைகளை வடிவமைத்துள்ளார்.
நமது குடியுரிமை நிருபர்
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்