இராமநாதபுரம்: தற்சமயம் அதிகரித்து வரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவலை தடுக்கும் வகையில் இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கார்த்திக். அவர்கள் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, கீழக்கரை உட்கோட்ட காவல் நிலையங்கள் சார்பாக, பொதுமக்கள் கூடும் இடங்களில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோய் தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் அடங்கிய அறிவிப்பு பதாகைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.