கோவை: கோவை, வெரைட்டி ஹால் ரோடு காவல் உதவி ஆய்வாளர் திரு. சிவகுமார் தலைமையில் ரோந்து பணியில் நேற்று மாலை ஈடுபட்டிருந்தனர். அப்போது இடையர் வீதி சந்திப்பில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் நின்று கொண்டிருந்தனர். மேலும் போலீசை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்தனர்.உடனே அவர்களை சுற்றி வளைத்த காவல்துறையினர்அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
ஒருவர் தப்பி ஓடினார்.மேலும் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் சிறிய அளவிலான சிலை ஒன்று இருந்தது சிலை குறித்து காவல்துறையினர் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்தனர். இதையடுத்து அவர்களை காவல் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சலிவன் வீதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் மோகன், பால வெங்கடேஷ் என்பதும் தப்பிச்சென்றது, திருநாவுக்கரசு என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பிச் சென்ற திருநாவுக்கரசை தேடி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்
நமது குடியுரிமை நிருபர் A. கோகுல்