ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் தமிழக காவல்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ( SMART KAVALAR APP) E- BEAT முறையானது தமிழக காவல்துறை இயக்குனர் படைத்தலைவர் முனைவர் திரு.சைலேந்திரபாபு அவர்களின் உத்தரவின்படி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு. கண்ணன், அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் வேலூர் சரகம் திருமதி. சத்திய பிரியா, அவர்களின் மேற்பார்வையில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. தீபா சத்யன், அவர்களின் தலைமையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள இரண்டு உட்கோட்டங்களில் முறையே ஒரு காவல் நிலையத்தை முன்னோட்டமாகக் கொண்டு அரக்கோணம் கிராமிய காவல் நிலையம் திமிரி காவல் நிலையம் ஆகியவற்றில் இன்று காலை 10 மணி அளவில்( SMART KAVALAR APP) மூலம் முறைE- BEAT அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தில் இரவு மற்றும் பகல் ரோந்து செல்லும் போலீசார் ஆண்ட்ராய்டு மொபைல் செயலியில் தனது ரோந்து பகுதியில் உள்ள ATM மையம் வங்கி பூட்டிய வீடுகள் மற்றும் பிற முக்கிய பகுதிகளுக்குச் சென்று தணிக்கை செய்யும்போது அதன் விவரங்களை ஆன்லைன் முறையில் மேற்படி செயலியின் மூலமாக பதிவேற்றம் செய்வர். மேலும் அவரவர் சரகத்தில் உள்ள கெட்ட நடத்தைக்காரர்கள் வரலாற்று பதிவேடு குற்றவாளிகள் சந்தேக நபர்கள் ஆகியோர்களின் நடவடிக்கைகளை மேற்படி செல்போன்செயலி மூலம் கண்காணிக்கப் படுவர். அதனை காவல் நிலைய பொறுப்பு அதிகாரி காவல் ஆய்வாளர் காவல் உதவி ஆய்வாளர் மேற்படி அந்த ஆப் மூலம் கண்காணித்து காவலர்களுக்கு அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்து தொடர் கண்காணிப்பில் இருப்பார்கள் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அடிக்கடி குற்றம் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்கள் மூத்த குடிமக்கள் தனியாக வசிக்கும் வீடுகள் மற்றும் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது பூட்டிய வீடுகள் பற்றிய விவரங்களை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து சென்றாள் அவ்விடங்கள் பற்றிய விவரங்களை மேற்படி செயலில் பதிவேற்றம் செய்யப்பட்டு ரோந்து காவலர்கள் மூலம் தொடர் கண்காணிப்பு உறுதிப்படுத்தப்பட்டு குற்றம் நடைபெறாமல் பாதுகாக்கப்படும் மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. விஸ்வேஸ்வரய்யா,திரு. முத்து கருப்பன், இணையவழி குற்றப்பிரிவு அரக்கோணம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.யாதவ் க்ரிஷ் அசோக், ராணிப்பேட்டை உட்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரபு,காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்