மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம் எம்.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் இரவு ரோந்து பணியில் இருந்த காவல்தறையினர் (16.07.2023) அதிகாலை சுமார் 01.00 மணியளவில் மல்லப்புரம் விலக்கு அருகே சந்தேகத்திற்கு இடமான முறையில் நடந்து வந்து கொண்டிருந்த திரு.வேடன்,(30/23), சீல்நாயக்கன்பட்டி கிராமம் என்பவரை விசாரணை செய்யும் பொருட்டு எம்.கல்லுப்பட்டி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மேற்படி காவல் நிலைய குற்ற எண் 106/23, பிரிவு 41 கு.வி.மு.ச-ன் படி வழக்கு பதிவு செய்துள்ளனர். பின்னர் சுமார் அரைமணி நேரம் கழித்து மேற்படி நபரை காவல் நிலைய சொந்த பிணையில் விடுவித்துள்ளனர். பின்னர் மேற்படி நபர் அவரது வீட்டிற்குச் சென்று விட்டார். காலையில் அவரது மனைவி அவரை எழுப்பும் போது அவர் எழுந்திரிக்கவில்லை. அவரது குடும்ப உறுப்பினர்கள் மேற்படி நபரை காவலர்கள் தாக்கியதன் காரணமாகவே இறந்துள்ளார். என்று இறந்த வேடன் என்பவரின் மனைவி பாண்டிச்செல்வி என்பவர் இது தொடர்பாக எழுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், எழுமலை காவல் நிலைய குற்ற எண்: 141/23, பிரிவு 174 கு.வி.மு.ச-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக அதே காவல்நிலைய அதிகாரிகளை நியமிக்காமல் உசிலம்பட்டி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் அவர்களை நியமித்து மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கில் வெளிப்படைத் தன்மையை கருத்தில் கொண்டு உடற்கூராய்வு செய்ய காவல்துறையினர் சார்பில் மருத்துவ குழு அமைத்து பிரேதத்தினை உடற்கூராய்வு செய்தும் அதனை வீடியோ பதிவு செய்திடவும் கேட்டுக்கொண்டதின் பேரில் தடயவியல் துறை தலைவர் மற்றும் தடயவியல்துறை மருத்துவர் கொண்ட குழு மூலம் உடற்கூராய்வு மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் செய்யப்பட்டது. மேலும் காவல்துறையினர் மூலம் உடற்கூராய்வு செய்வதற்கு முன்பு காவல்துறையினர் முன்னிலையில் இறந்தவரின் மனைவி பாண்டிச்செல்விக்கு பிரேதத்தில் எவ்வித வெளிக்காயங்களும் இல்லை என்பதை காண்பித்து அதை வீடியோ பதிவும் செய்யப்பட்டது. ஊடற்கூராய்வு முடிந்த பின் முதற்கட்டமாக மேற்படி நபருக்கு இருதய கோளாறு காரணமாக இறப்பு நேரிட்டதாக தெரிகிறது. மேலும் இது சம்பந்தமாக மருத்துவ குழுவினரின் இறுதி அறிக்கை பெற வேண்டியுள்ளது. மேலும் முதற்கட்ட புலனாய்வில் காவல்நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்ததில் மேற்படி நபருக்கு காவல்நிலையத்தில் காவல்துறையினரால் எவ்வித தாக்குதலும் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்