திருவாரூர்: (12.02.2024) திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.ஜெயக்குமார்,M.Sc, (Agri)., அவர்கள் உத்தரவின் படி திருவாரூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கணபதி மற்றும் காவலர்கள் சேந்தமங்கலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சேந்தமங்கலம் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் க்ரைம் சம்பந்தமான இணையவழி குற்றங்களான video call to unknown persons, Loan scam through sms and phone calls குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பெருகி வரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
மேலும், சைபர் கிரைம் சம்பந்தமாக – சமூக வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது என்பது குறித்தும், சைபர் க்ரைம் குற்றங்களில் சிக்காமல் கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் குறித்தும் சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டதாக அறிந்தால் உடனடியாக 1930 என்ற உதவி எண் மற்றும் www.cybercrime.gov.in -ல் புகார் அளிக்குமாறு பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி திருவாரூர் மாவட்ட சைபர்கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கணபதி தலைமையிலான போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.