கோவை: காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 32 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 170 மது பாட்டில்கள் மற்றும் 64 லிட்டர்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
உட்கோட்ட காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 15 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2.39 கிலோ கிராம் எடையுள்ள புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
சட்டவிரோத செயலில் ஈடுபடுவோர் பற்றி தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 949818121 மற்றும் வாட்ஸ்அப் எண் 7708100100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.
கோவையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

A. கோகுல்