தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் நேற்று மாவட்டம் முழுவதும் வாகன சோதனை செய்யவும்,
தங்கும் விடுதிகளில் குற்றவாளிகள் மற்றும் சந்தேகப்படும்படியான நபர்கள் தங்கியுள்ளனரா என சோதனையிடவும், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தணிக்கை செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும், காவல் ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது. அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் 96 தங்கும் விடுதிகள் சோதனையிடப்பட்டும், வாகன சோதனையில் 2500 வாகனங்கள் சோதனையிடப்பட்டு மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக 2056 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருட்டு மற்றும் கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பழைய குற்றவாளிகள் 47 பேர் மற்றும் கொலை வழக்கு குற்றவாளிகள் 75 பேர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் தற்போதைய இருப்பிடம் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்தும் தணிக்கை செய்ய்பட்டுள்ளது,
. மேலும் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த 19 பேர் கைது செய்யப்பட்டு 98 மதுபாட்டில்களும், சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டு 597 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்ட்டது.
பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்கள் தலைமறைவாக இருந்த 4 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தீவிர ரோந்துப் பணி மேற்கொண்டு பல்வேறு நடவடிக்கை எடுத்த தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.