ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த வாழைப்பந்தல் கிராமத்தில் நம்மாழ்வார் இயற்கை குழு சார்பில், மரம் நடுதல், பனை விதை தூவுதல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக 6-வது ஆணாட்க நேற்று வாைழப்பந்தலில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. ராணிப்பேட்டை துணை சூப்பிரண்டு திரு. பிரபு, தலைமை தாங்கி, மரக்கன்று நடும் விழாவை தொடங்கிவைத்தார். இந்த ஆண்டு 500 மரக்கன்று நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் முனுசாமி, ஒன்றியக் குழு உறுப்பினர் குணசுந்தரி, காவல் உதவி ஆய்வாளர் திரு.ரமேஷ், குழுவின் துணைத் தலைவர் வினோத் மற்றும் நம்மாழ்வார் இயற்கை குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்