சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வேலாயுதபட்டினம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை,
மானாமதுரை, திருப்பத்தூர், காரைக்குடி, காவல்துறை கண்காணிப்பாளர்கள்,ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் தலைமை காவலர்கள், காவலர்கள் தங்களது குடும்பத்துடன் ஒன்றிணைந்து பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கு வேட்டி, துண்டு வழங்கப்பட்டது. கிராம மக்களுக்கு வேட்டி, சேலையையும் காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் வழங்கினார். அதன்பின்பு உறியடி போட்டி, கயிறு இழுக்கும் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றது. இதில் காவலர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்று உற்சாகமடைந்தனர்.