அரியலூர்: அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு.தீபக் சிவாச் I.P.S., அவர்கள் உத்தரவின்படி 10.02.2025 இன்று அரியலூர் மாவட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரியலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பாக சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அரியலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.R.முத்தமிழ்ச்செல்வன் அவர்கள் தலைமையில் வகித்தார்கள்.
அரியலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.கென்னடி அவர்கள் (சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) , காவல் உதவி ஆய்வாளர் திரு.ரவி அவர்கள் முன்னிலையில் வகித்தார்கள்.
அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் திருமதி.ராஜ ஸ்ரீ ,தாட்கோ உதவி மேலாளர் திரு.சிவகுமார் அவர்கள் மற்றும் கலைக் கல்லூரி முதல்வர் முனைவர். ரவிச்சந்திரன் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
முன்னதாக கல்லூரி மாணவ மாணவிகளிடம் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர்கள் அரசியலமைப்பு மற்றும் சட்ட உரிமைகள், வன்கொடுமை மற்றும் தீருதவி பற்றியும்,பட்டியல் இன மக்களுக்கு அரசு வழங்கும் கல்வி ஊக்கத்தொகை,தாட்கோ உதவி திட்டங்கள், தொழிற்பயிற்சிகள்,கடன் உதவி சலுகைகள் பற்றியும், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும், தீண்டாமை நடைபெறாமல் தடுப்பதற்காகவும் அரசின் துறைகள் என்னென்ன செயல்படுகிறது என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் குறித்து விரிவான தகவல்கள் துண்டு பிரசுரங்களாக வழங்கப்பட்டன.இளைஞர் சமுதாயம் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்ட இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.கவிதா அவர்கள் மற்றும் உதவி ஆய்வாளர் திரு.மணிகண்டன் அவர்கள் இணையவழி குற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
பெருகிவரும் சைபர் குற்றங்களான டிஜிட்டல் கைது மோசடி (தங்களை காவல்துறையினர் Digital arrest செய்து இருப்பதாக கூறி பணம் பறித்தல்), TASK மோசடி( டாஸ்க் செய்தால் அதிக பணம் தருவதாக கூறி) , online trading மோசடி, online investments மோசடி (சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி),ஏதேனும் அரசு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற பணம் செலுத்த வேண்டும் என்று கூறி ஏமாற்றுதல் மற்றும் பெண்களுக்கு எதிரான சமூகவலைதள குற்றங்கள் பற்றியும் அந்த குற்றங்களிலும் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.சித்ரா அவர்கள் போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இணையவழி புகார் உதவி எண் 1930 , பெண்கள் பாதுகாப்பு உதவி 181, குழந்தைகள் நல பாதுகாப்பு உதவி எண் : 1098, மற்றும் மதுவிலக்கு தொடர்பான புகார் உதவி எண் :10581 குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு, துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள், கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறையினர் சார்பில் மதிய உணவுகள் வழங்கப்பட்டது.